திருப்பத்தூரை அடுத்த குனிச்சி கூட்ரோடு பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. நடைபாதை மற்றும் வாகனங்களில் செல்வோரை விரட்டிச் சென்று கடிக்க பாய்கின்றன. நாய்கள் தொல்லையால் பள்ளி மாணவர்கள், முதியவர்கள், பெண்கள் அச்சத்தில் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜரத்தினம், குனிச்சி.