காட்பாடி வீ.ஜி.ராவ்நகர் சி செக்டார் பகுதியில் ஏராளமான நாய்கள் உள்ளன. அந்த நாய்கள் இரவு நேரத்தில் சண்டையிட்டு கொள்வதாலும், ஓலமிடுவதாலும் மக்கள் தூக்கம் கெடுகிறது. நாய்களால் மக்களுக்கு தொல்லையாக உள்ளது. இரவில் வெளியே சென்று வர நாய்கள் அச்சுறுத்தலாய் உள்ளன. எங்கள் பகுதியில் நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ப.கி.மனோகரன், காட்பாடி.