நாய்கள் தொல்லை

Update: 2025-01-05 12:40 GMT

காட்பாடியை அடுத்த கீழ்வடுகன்குட்டை பகுதியில் தெருநாய்கள் தொல்லை உள்ளது. இந்தப் பகுதியில் நடந்து செல்லும் சிறுவர், சிறுமிகள், பெண்கள், முதியோர்களை தெருநாய்கள் துரத்தி கடிக்கப் பாய்கின்றன. இதனால், பள்ளி செல்லும் சிறுவர், சிறுமிகள், பொதுமக்கள் அச்சத்துடனேயே செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வெங்கடேசன், கீழ்வடுகன்குட்டை. 

மேலும் செய்திகள்