வந்தவாசி பகுதிகளில் தெரு நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. வந்தவாசி புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் 30-க்கும் மேற்பட்ட நாய்கள் வலம் வருகின்றன. வாகனங்களில் செல்வோரை துரத்தி கடிக்க வருகின்றன. அவ்வாறு நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் வந்தவாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு செல்கிறார்கள். எனவே வந்தவாசி பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வே.குருலிங்கம், சமூக ஆர்வலர், வந்தவாசி.