காட்பாடியை அடுத்த மேல்பாடி கிராமத்தில் நாய்கள் அதிகமாக உள்ளன. இதனால் குழந்தைகள் கடைகள் மற்றும் பள்ளிகளுக்குச் செல்ல அச்சப்படுகின்றனர். நாய்கள் ஆங்காங்கே மலம் கழிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் எங்கள் பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. அந்தக் குரங்குகளை பிடித்து காட்டில் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, மேல்பாடி.