ஆபத்தான புளியமரம்

Update: 2022-09-09 16:01 GMT

ஜோலார்பேட்டையை அடுத்த குடியானக்குப்பம் பகுதியில் ஜோலார்பேட்டை-நாட்டறம்பள்ளி நெடுஞ்சாலையோரம் பெரிய புளியமரம் ஒன்று உள்ளது. அந்தப் புளியமரம் இரண்டாகப் பிளந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. அந்த மரம் எந்தநேரத்திலும் கீழே விழலாம் என்ற அச்சம் உள்ளது. நாளுக்கு நாள் மரத்தின் பிளவு விரிவடைந்து கொண்டே செல்கிறது. அந்தப் புளியமரம் கீழே விழுந்தால் அருகில் உள்ள வீடுகள், நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் சேதம் அடையும். வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுவர். ஆபத்து நடக்கும் முன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-செ.கோகுல், ஜோலார்பேட்டை. 

மேலும் செய்திகள்