வேலூர் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு உள்ள ஆற்காடு சாலையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. அதேபோல் கோடையிடி குப்புசாமி பள்ளி அருகிலும் மாடுகள், நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் சுற்றித் திரியும் மாடுகள், நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாயவன், வேலூர்.