வேலூர் சத்துவாச்சாரி கோர்ட்டு அருகே தபால் நிலையத்தில் உள்ள ஆதார் கார்டு திருத்தும் சேவை மையத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்தசில வாரங்களாக அந்த ஆதார் கார்டு சேவை மையம் மூடப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தபால் நிலையத்தில் உள்ள ஆதார் கார்டு சேவை மையத்தை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வம், வேலூர்.