வந்தவாசி தாலுகா தேசூர் ஆதிகேசவபெருமாள் கோவிலில் புதிதாக தேர் செய்து, வெள்ளோட்டம் நடத்தப்பட்டது. அன்று முதல் இன்று வரை தேர் மழை, வெயிலில் உள்ளது. அதற்காக தேர் கொட்டகை கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், அந்தப் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தேர் கொட்டகையை கட்டி விரைவில் முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-ஆர்.பாலாஜி, தேசூர்.