கால்வாய் ஆக்கிரமிப்பு

Update: 2025-04-20 19:49 GMT

சேத்துப்பட்டு தாலுகா செவரப்பூண்டி ஊராட்சி கிழக்குமேடு-மருத்துவம்பாடி சாலையில் இருக்கும் குபேர நகரில் நீர்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து மனைபிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கால்வாய் இல்லாததால் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் விவசாய நிலத்தில் செல்கிறது. இதனால் விளை பொருட்கள் சேதம் ஆகிறது. கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ம.கி.தமிழ்செல்வன், மருத்துவாம்பாடி. 

மேலும் செய்திகள்

மயான வசதி