திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுகா தெக்குப்பட்டு கிராமத்தில் ஏரி உள்ளது. அந்த ஏரிக்கு நீர் வரும் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் குறுக்கே மண்ணை கொட்டி வாகனங்கள் செல்லும் வகையில் ஒருவர் ஆக்கிரமித்து தடை செய்துள்ளார். இதுகுறித்து ஏற்கனவே கிராம நிர்வாக அலுவலரிடம் விவசாயிகள் சார்பாக புகார் செய்தோம். கிராம நிர்வாக அலுவலர் நேரில் வந்து கால்வாய் குறுக்கே மண் கொட்டியிருந்ததை அகற்றி, ஏரிக்கு தடையின்றி தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்தார். தற்போது மீண்டும் ஒதே நபர் கால்வாயின் குறுக்கே மண்ணை கொட்டி ஆக்கிரமித்து ஏரிக்கு தண்ணீர் செல்லாதவாறு தடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, கால்வாயின் குறுக்கே கற்களை வைத்து அதன் மேல் மண் கொட்டி சாலை போல் அமைத்திருப்பதை அகற்ற வேண்டும்.
-பொதுமக்கள், தெக்குப்பட்டு.