கால்வாய் கரையை சேதப்படுத்த முயற்சி

Update: 2025-05-18 20:37 GMT

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா புலியூரம்பாக்கம் கிராமம் அருகில் தண்டரிக்கால்வாய் உள்ளது. அதன் அருகில் 20 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி மண் எடுக்கப்பட்டுள்ளது. அதை வருவாய்த்துறையோ, காவல்துறையோ சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரோ கண்டு கொள்ளவில்லை. இதுபோன்ற செயல்களால் கால்வாய் கரை முழுமையாக சேதம் அடைய வாய்ப்புள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவக்குமார், புலியூரம்பாக்கம்.

மேலும் செய்திகள்