ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு உரிய ரசீது (ஒப்புகை சீட்டு) வழங்கப்படுவதில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் அளித்த மனுவின் நிலையை தெரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே தாலுகா அலுவலகத்தில் பெறப்படும் பொதுமக்களின் மனுக்களுக்கு உரிய ரசிது வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இதற்கான தனி அலுவலரை நியமனம் செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
-குமரன், அரக்கோணம்.