தற்காலிக கடை நடத்துவோர் மீது நடவடிக்கை

Update: 2024-09-29 19:41 GMT

திருவண்ணாமலையில் பவுர்ணமி அன்று கிரிவலம் செல்லும் பக்தர்களுக்காக கிரிவலப்பாதையில் சிலர் தற்காலிக உணவுப்பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகின்றனர். அவர்களில் சிலர் மாநகராட்சியில் அனுமதி பெறாமல் கடை நடத்துகிறார்கள். அவர்கள் தயாரித்து விற்பனை செய்யும் உணவுப்பொருட்களால் பக்தர்களுக்கு உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது. ஆகையால், கிரிவலப்பாதையில் உரிய அனுமதி பெறாமல் தற்காலிக உணவுப் பொருட்கள் விற்பனை கடை நடத்துவோர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜராஜன், காஞ்சி.

மேலும் செய்திகள்