வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பொய்கை வாரச் சந்தை 1.76 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். அங்கு, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திராவில் இருந்தும் வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படும் மாடுகள், ஆடுகளை கீழே இறக்குவதற்கு மேடான இட வசதி இல்லாததால் மேம்பாலத்துக்கு கீழே கால்நடைகளை பாதுகாப்பின்றி கீழே இறக்கி சந்தைக்கு ஓட்டிச் செல்கின்றனர். வாகனங்களின் பின் கதவை திறந்து கால்நடைகளை கீழே இறக்க ஒரு இடத்தில் சாய்தள மேடை வசதி அமைத்துக் கொடுக்க வேண்டும். மேலும் வாரச்சந்தையை மேம்படுத்த வேண்டும்.
-ச .பிரவீன் சமூக ஆர்வலர், பொய்கை.