கே.வி.குப்பம் தாலுகா அலுவலக பஸ் நிறுத்தத்தில் பயணிகளுக்கான நிழற்குடை இல்லை. இங்கு தாலுகா அலுவலகம் பஸ் நிறுத்தம் என்பதை காட்டும் பெயர் பலகையும் இல்லை. பல பஸ்கள் இங்கு நிற்காமல் செல்வதால் வேப்பங்கனேரி அல்லது வடுகந்தாங்கல் என்று அடுத்த பஸ் நிறுத்தம் வரை சென்று, ஆட்டோ பிடித்தோ நடந்தோ திரும்பி வர வேண்டிய அவலத்தில் பயணிகள் உள்ளனர். தாலுகா அலுவலக பஸ் நிறுத்தத்தில் அனைத்துப் பஸ்களும் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நடராஜன், கே.வி.குப்பம்.