ரோந்து பணியை தீவிரப்படுத்த கோரிக்கை

Update: 2022-08-10 14:50 GMT

பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உப்புஓடை அருகே கிரீன்சிட்டி குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு பலநூற்றுக்கணக்கான வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில் புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. திருடர்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. திருடர்கள் இரவு நேரங்களில் இரும்பு கம்பிகள் மற்றும் கட்டிட கட்டுமானப்பொருட்களை பொருட்களை அடிக்கடி திருடி சென்று விடுகின்றனர். இந்த திருட்டுக்களை தடுக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்