மின்கம்பங்கள் மாற்றப்படுமா?

Update: 2022-07-31 13:38 GMT
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி-ஆலமரத்தடி இடையே புத்தகரத்தில் மெயின் சாலையில் அடுத்தடுத்த 2 மின்கம்பங்கள் சிதலமடைந்து காணப்படுகிறது. மேலும் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த சாலை வழியாக போக்குவரத்து அதிகமாக உள்ளது. ஆபத்தான இந்த மின்கம்பம் பலத்த காற்று வீசினால் எந்த நிலையிலும் சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உயிர் சேதம் ஏற்படும் முன்பு ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் நட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்