திருக்கோவிலூர் மணலூர்பேட்டை பேரூராட்சியில் உள்ள தியாகதுருகம்-திருவண்ணாமலை சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதை தவிர்க்க வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.