கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து ரெயில்வே கேட் தெருவில் உள்ள மின்மாற்றியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளதாக அம்ஜத் என்பவர் அனுப்பிய பதிவு கடந்த 4-ம் தேதி தினத்தந்தி புகார்பெட்டியில் பிரசுரமானது. இதையடு்த்து மின்கம்பத்தின் அடிப்பகுதியைச் சுற்றிலும் கான்கிரீட் அமைத்து பலப்படுத்தப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.