தென்காசி மாவட்டம் கடையம் பஜாரில் பழக்கடை முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் சாலையின் நடுவிலும் பெரிய பள்ளமாக உள்ளது. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.