பாலம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-19 16:57 GMT
தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள பாலம் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. பாலத்தின் அருகே உள்ள சுற்றுச்சுவர்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இடிந்துவிழுந்துள்ளது. மேலும், பாலத்தில் செடி,கொடிகள் வளர்ந்துள்ளன. இதன்காரணமாக பாலம் வலுவிழந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள தூண்களிலும் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் பெரிய கோவில் அருகே உள்ள பாலத்தில் வளர்ந்துள்ள செடி,கொடிகளை அகற்றவும், பாலத்தை சீரமைத்து அதன் உறுதி தன்மையை ஆராயவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்