சுகாதாரமற்ற அரசு மருத்துவமனை

Update: 2022-07-18 17:35 GMT

பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். மேலும் உடல்நிலை முடியாதவர்கள் அங்கேயே உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அரசு மருத்துவமனையின் 2-வது மாடியில் அமைக்கப்பட்டுள்ள படுக்கைகள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளதுடன், கழிவறையின் தண்ணீர் குழாய்கள் உடைந்தும் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகின்றன. இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்