மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பெருந்தோட்டம் அம்பேத்கர் தெருவில் உள்ளவர்கள் ரேஷன் கடைக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன்காரணமாக அந்த பகுதி மக்கள் இருசக்கர வாகனங்களிலும், ஆட்டோக்களிலும் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி அந்த பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?