பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் உள்ள கழிப்பிடங்களை சரியாக பராமரிப்பதில்லை. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால் நோயாளிகள் கடும் சிரமப்படுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே ஆஸ்பத்திரியில் உள்ள கழிப்பிடங்களை முறையாக பராமரிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.