கொசுக்களால் நோய் பரவும் அபாயம்

Update: 2022-07-13 18:03 GMT

திருச்சி பீமநகர் மேல கொசத்தெரு பகுதியில் உள்ள அடி பம்பு இருக்கும் இடத்தில் தண்ணீர் செல்லும் வடிகால் பாதை இல்லாமல் தண்ணீர் அங்கேயே தேங்கி நிற்கிறது. இது குழந்தைகள், முதியவர்கள் அதிகம் இருக்கும் பகுதி ஆகும். இதனால் அந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற தொற்று வியாதிகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய வடிகால் அமைப்பு ஏற்படுத்தித் தருமாறு அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


மேலும் செய்திகள்