மீன் மார்க்கெட்டில் சுகாதார சீர்கேடு

Update: 2022-09-14 15:05 GMT

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாட்டில் உள்ள நகராட்சி மீன் மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு கூறைநாடு மட்டுமின்றி அதனைசுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் வந்து மீன்கள் வாங்கி செல்வார்கள். மேலும் ஒரு சிலர் மீன்களை அங்கே வெட்டி சுத்தம் செய்து வாங்கி செல்வார்கள். இந்த கழிவுகளை கொட்டுவதற்கு குப்பை தொட்டிவசதியில்லை. இதனால் திறந்த வெளியில் கொட்டிவிடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் மார்க்கெட்டில் கழிவறை வசதியில்லை. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்