நாய்கள் தொல்லை

Update: 2022-09-08 11:43 GMT

கொரடாச்சேரி பகுதியில் ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பல்வேறு கல்விநிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இதனால் இந்த பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். ஆனால் இந்த பகுதியில் நாய்கள் தொல்லை அதிக அளவில் காணப்படுகிறது. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், சிறுவர்-சிறுமிகளை துரத்தி சென்று கடிக்கின்றன. இதன்காரணமாக அவர்கள் அச்சத்துடன் சாலையில் நடந்து சென்று வருகின்றனர். மேலும், வாகனங்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்