திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பேரளத்தில் கிளை நூலகம் உள்ளது. இந்த நூலகத்தின் மூலம் அந்த பகுதி மக்கள், பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள் பயன்பெற்று வந்தனர். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக கிளை நூலகம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், போட்டி தேர்வுகளுக்கு தயாராகுபவர்கள் என அனைவரும் சிரமப்படுகின்றனர். நூலகம் திறக்கப்படாததால், பக்கத்து ஊரில் உள்ள நூலகங்களுக்கு சென்று படிக்கும் நிலை உள்ளது. எனவே இந்த கிளை நூலகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் திறந்து விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.