மதுரை மாவட்டம் மேலூர் திருவாதவூர் ரோடு தினசரி காய்கறி மார்க்கெட் செல்லும் வழியில் கழிவுநீர் கால்வாயின் ஒரு பகுதியில் சிலாப் இல்லாமல் திறந்தநிலையில் உள்ளதை சீரமைக்க தினத்தந்தி புகார் பெட்டியில் சுட்டிக்காட்டப்பட்டது. அதன் எதிரொலியாக தற்போது கழிவுநீர் கால்வாயில் சிலாப் அமைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து தினத்தந்திக்கும் உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.