பெயர் பலகை அவசியம்

Update: 2022-07-09 16:52 GMT


உளுந்தூர்பேட்டை திருச்சி ரோட்டில் உள்ள சேலம் ரவுண்டானாவில் பெயர் பலகை வைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பெரும் குழப்பம் அடைந்து வருகின்றனர். பெயர் பலகை இல்லாததால் அவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு வழி தெரியாமல் தவறி வேறு ஊருக்கு சென்று வருகின்றனர். இதை தவிர்க்க சேலம் சாலையில் உள்ள ரவுண்டானாவில் பெயர் பலகை வைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்