திருச்சி பொன்மலைபட்டி அடைக்கல அன்னை நகர் 3-வது, 4-வது தெருவில் தெரு நாய்கள் கூட்டமாக அலைந்து கொண்டும் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக்கொள்கின்றன. இதனால் சாலையில் பெண்கள், குழந்தைகள் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.