குரங்குகள் தொல்லை

Update: 2022-08-22 11:56 GMT
தஞ்சை மாவட்டம் மேலவெளி பகுதி களிமேடு கிராமத்தில் இருந்து ரெட்டிப்பாளையம் செல்லும் வழியில் விடுதலைநகர் உள்ளது. இந்த பகுதியில் குரங்குகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்கள், செல்போன் போன்றவற்றை தூக்கி செல்கின்றன. இதன்காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சாலையில் அங்கும், இங்கும் கூட்டமாக சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்தரியும் குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?





மேலும் செய்திகள்