மரக்காணம் சன்னதி தெரு, மேட்டுதெரு திரவுபதி அம்மன் கோவில் தெரு, பள்ளிக்கூட தெரு உள்ளிட்ட இடங்களில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. தெருவில் நடந்து செல்வோரை துரத்தி சென்று கடித்து வருகின்றன. நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் முன் வருமா?