சென்னை மீஞ்சூரில் இருந்து காட்டூர் வழியே பழவேற்காடு செல்வதற்கு போதுமான பஸ் வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பணிக்கு செல்வோர் குறித்த நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே பொது மக்களின் நலன் கருதி பிராட்வேயிலிருந்து செல்லும் (தடம் எண்:56பி) பஸ்சை கட் சர்வீசாக மாற்றி காட்டூர் வழியே மீஞ்சுர் முதல் பழவேற்காடு வரை செலுத்தினால் மக்கள் பயன்பெறுவார்கள்.