சென்னை அடையாறு காமராஜ் அவென்யூ 1-வது தெருவில் மழை நீர் செல்வதற்காக வெட்டப்பட்ட வடிகால்வாய் மூடப்படாமல் இருக்கிறது. நீண்ட நாட்களாக இவ்வாறு உள்ளது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் ஒரு வித பதட்டத்துடனே இரவு நேரங்களில் இச்சாலையை கடந்து செல்கின்றனர். அதிகாரிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.