சேதமடைந்த இருக்கைகளால் பயணிகள் அவதி

Update: 2022-03-25 10:15 GMT
சென்னை எண்ணூர் நெடுஞ்சாலையில் தண்டையார்பேட்டை மார்கெட் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் அமரும் இருக்கைகள் கடந்த 8 மாதங்களாக சேதமடைந்து கிடக்கிறது. முதியோர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட பஸ் நிறுத்ததிற்கு வரும் பயணிகள் இருக்கைகளில் அமர முடியாமல் நிழற்குடையின் கீழே நின்றபடியே பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. இதை சம்பந்தப்பட்ட துறை கவனித்து தீர்வு வழங்குமா?

மேலும் செய்திகள்