பெங்களூரு தாசரஹள்ளி பகுதியில் மும்பை, ஐதராபாத் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. வட மாநிலங்களுக்கு செல்லும் பிரதான சாலையாக இந்த நெடுஞ்சாலை உள்ளது. அந்த நெடுஞ்சாலையில் உள்ள மேம்பால சுவர் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பாலத்தில் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு அதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.