திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. சுற்று வட்டாரத்தில் உள்ள 15 கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும் இந்த ஆரம்ப சுகாதரத்தை நம்பியே இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த ஆரம்ப சுகாதாரத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பெண்களும், முதியவர்களும் சிரமப்படும் சூழ்நிலை அமைகிறது. மேலும் சுகாதார நிலையத்தை சுற்றி முட்புதர்கள் அதிகமாக வளர்ந்துள்ளது. இந்த பிரச்சினையை சரி செய்ய சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?