பெங்களூரு குமரகிருபா சாலையில் முதல்-மந்திரியின் அலுவலக இல்லம் உள்ளது. இந்த சாலையில் உள்ள நடைபாதை உடைந்து கிடக்கிறது. இதனால் அந்த நடைபாதையை யாரும் பயன்படுத்த முடிவது இல்லை. அந்த நடைபாதையை சீரமைக்க அதிகாரிகளும் முன்வரவில்லை. நடைபாதை சரியில்லாததால் பாதசாரிகள் சாலையில் இறங்கி நடந்து செல்கின்றனர். மிக குறுகலான சாலையான அப்பகுதியில் பாதசாரிகள் மீது வாகனங்கள் மோதும் அபாயமும் உள்ளது. இதனை தடுக்க நடைபாதையை சீரமைக்க வேண்டும்.