பள்ளியின் அருகே குப்பை மேடு

Update: 2022-08-19 17:34 GMT
பெங்களூரு மகாதேவபுரா கித்திகனூர் பகுதியில் ஒரு பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் அருகே உள்ள காலி நிலத்தில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி தற்போது குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. அங்கு கொட்டப்படும் குப்பைகளை கால்நடைகள் இழுத்து வந்து சாலையில் போடுகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மாணவர்களின் உடல்நலனை கருத்தில் வைத்து குப்பை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்