கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் பஜாரில் ஒரேயொரு பொது கழிப்பறை உள்ளது. சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்லும் சமயத்தில் போதிய கழிப்பறை வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதேபோன்று பொதுமக்களும் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கூடுதல் கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.