பெரம்பலூர் மாவட்டம், கீழப்பெரம்பலூர் செட்டியார் கடையிலிருந்து தெற்கு இலுப்பைதோப்பு வரை உள்ள சாலை மிகவும் பழுது அடைந்து ஆங்காங்கே பள்ளங்கள் அதிகமாக உள்ளது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும், மழை காலங்களில் ஆங்காங்கே பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.