சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் 4-வது மெயின் ரோடு மற்றும் 15-வது சாலையில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. மேலும் சாலையில் நடந்து செல்பவர்களை பார்த்து குரைப்பதும், வாகனங்களில் செல்பவர்களை துரத்தி செல்வது போன்ற செய்ல்களில் தெரு நாய்கள் ஈடுபடுகின்றன. பொதுமக்களுக்கு நாய்கள் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்குமா?