ராமநாதபுரம் மாவட்டம் அறனூற்றி மங்கலம் பஞ்சாயத்து மேட்டுக்கற்களத்தூர் கிராமத்தில் கோனார்தம்மம் ஊருணி பல வருடங்களாக தூர்வாராமல் உள்ளது. இப்பகுதி பொதுமக்களின் நீராதாரத்திற்கு உதவி வரும் இந்த ஊருணியில் கரையோரங்களில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் ஊருணியில் அடிக்கடி நீர் வற்றி விடுகிறது. எனவே அதிகாரிகள் இந்த ஊருணியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.