கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி குங்கூர் மூலாவில் இருந்து கம்மாத்திக்கு சாலை செல்கிறது. இதில் தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள் காலை, மாலை வேளைகளில் நடந்து செல்கின்றனர். ஆனால் சாலையோரம் புதர்கள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. இதை அகற்றாததால் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.