ராமநாதபுரம் மாவட்டம் தெற்குதரவை பஞ்சாயத்து வைரவன்கோவில் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாத காரணத்தால் இங்கு பஸ்சிற்காக காத்திருக்கும் பள்ளி, மாணவர்களும் முதியோர்களும் மழையிலும் வெயிலிலும் பஸ்சிற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே இநத பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாாிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.