மண்சரிவு ஏற்படும் அபாயம்

Update: 2022-08-15 14:38 GMT

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்துறை பகுதியில் வாட்டர் ஏ.டி.எம். அருகில் உள்ள பொது இடத்தில் சிமெண்டு கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடக்க முடியாத நிலை உள்ளது. அதன் அருகில் மிகப்பெரிய கால்வாய் உள்ளது. இதனால் அதிக பாரம் அதன் அருகில் இருப்பதால் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் அப்பகுதியில் உள்ள கற்களை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்