சென்னை நன்மங்கலம் அருள் முருகன் நந்தவனம் நகர் குடியிருப்பில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் பன்றிகள் சாலையில் அடிபட்டும், நாய்களால் கடிக்கப்படும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. வாகனத்தில் அடிபட்டு இறக்கும் பன்றிகளை யாரும் அப்புறப்படுத்துவதில்லை. இறந்த பன்றிகள் அங்கேயே கிடப்பதால் துர்நாற்றம் வீசி நோய்தொற்றும் ஏற்படுகிறது. எனவே குடியிருப்புகளில் உலாவும் பன்றிகளை அப்புறப்படுத்த சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.