சென்னை திருவல்லிக்கேணி, காசிம் அலி 2-வது தெரு நுழைவு வாயில் பகுதியில் இருக்கும் மழைநீர் வடிகால்வாய் தூர்வாரப்படாமல் இருப்பது குறித்த செய்தி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதற்கு உடனடி தீர்வு கிடைக்கும் விதமாக மாநகராட்சி ஊழியர்களால் மழைநீர் வடிகால்வாய் தூர்வாரப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் உடனடி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி நிர்வாகத்துக்கும் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பாராட்டை தெரிவித்தனர்.